புத்தகத்தலைப்பு: கரும்பலகைக்கு அப்பால்
ஆசிரியர்: கலகல வகுப்பறை சிவா
** உலகெங்கிலும் வெளிவந்த ஆசிரியர்கள் குறித்த திரைப்படங்களின் வழியாக மாணவர்-ஆசிரியர் உறவை, இன்றைய கல்வியின் நிலையைப் பல கோணங்களில் விளக்குகிறது ‘கரும் பலகைக்கு அப்பால்…’ புத்தகம்.
** திரைப்படங்களால் சமூகத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பது உண்மை என்றால் நேர்மறைத் தாக்கங்களையும் ஏற்படுத்த முடியும் என்ற பார்வையில் மாற்றங்களை விரும்பும் ஆசிரியர் கலகலவகுப்பறை சிவா எழுதியிருக்கும் புத்தகம் இது.
**குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடைப்பட்ட குழப்பமான மனநிலையில் வளரிளம் பருவத்தினர் சிக்கித் தவிப்பார்கள். அப்பருவத்தில் இருக்கும் மாணவர்களைத் தான் சொல்வதை எல்லாம் கேட்கச் செய்வது ஆசிரியரின் வெற்றி அல்ல. அனுபவ அறிவு, நுண்ணறிவைப் பயன்படுத்தி அவர்களை மடைமாற்றுவதே ஆசிரியர் பணி என்பது 2012-ல் வெளிவந்த ‘Last Bench’ என்ற மலையாளத் திரைப்படத்தின் வழியாக இதில் பேசப்பட்டிருக்கிறது.
**2010-ல் வெளிவந்த ‘Waiting for Superman’ என்ற ஆங்கில ஆவணப்படத்தை விவரிப்பதன் மூலமாக அமெரிக்காவின் அரசுப் பள்ளிகளுக்கும் இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் இடையிலான வித்தியாசம் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது
**இந்தி, மலையாளம், ஆங்கிலம், சீனம், கொரியா உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த சில திரைப்படங்களை அடிப்படையாக வைத்துக் கல்வி அரசியலை இப்புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் அலசுகிறது.
**மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக ஆசிரியர்கள் தங்களை செதுக்கிக்கொள்ள இத்திரைப்படங்கள் கண்டீப்பாக உதவும்
**ஆசிரியர்கள் என்பவர்கள் கற்பிப்பவர்கள் அல்ல..!
கற்றுக்கொள்பவர்கள்..!
**பாடத்தை நடத்துவது மட்டுமல்ல ஆசிரியர் பணி மாணவர்களை பண்படுத்துவதே ஆகும்.
**மாணவர்களை மதிப்பெண்கள் பெற வைப்பதை விட மனிதநேய வளர்ப்பதுவே ஆசிரியர் பணி என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.
நன்றி 'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,


0 Comments:
Post a Comment