புத்தகம்:1   புத்தகத்தலைப்பு:ஆயிஷா ஆசிரியர்:இரா.நடராஐன் **நமது கல்விமுறை ஒருவருடத்தில் படித்த பாடங்களை தேர்வின் போது நன்றாக எழுதுபவர்களை  ம...


ஆயிஷா - இரா.நடராஐன்

 புத்தகம்:1 

 புத்தகத்தலைப்பு:ஆயிஷா

ஆசிரியர்:இரா.நடராஐன்





**நமது

கல்விமுறை

ஒருவருடத்தில்

படித்த பாடங்களை

தேர்வின் போது

நன்றாக எழுதுபவர்களை 

மட்டும்

அறிவாளி என்கிறது..!

எழுதவில்லையெனில்

தேர்ச்சி இல்லை என்கிறது..!

மாணவர்கள்

மதிப்பெண்களால்

மதிப்பிடப்படுகிறார்கள்...!

மனப்பாடமே கல்வியில்

முக்கிய இடம் பெறுகிறது...!

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வித்தியாசமான முறையில் சிந்திக்கும் பள்ளி மாணவி ஆயிஷாவை மையமாகக் கொண்டது இந்த நாவல்


**ஒரு அறிவியல் ஆசிரியை தனது அறிவியல் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையாக இந்த ஆயிஷா குறுநாவல் உள்ளது.


**கல்வி என்பது மனிதருக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தை வெளிக்கொண்டுவருவதே என்கிறார் விவேகானந்தர் அப்படி தனக்குள் இருக்கும் ஆய்வு மனப்பான்மைகளை பரிசோதித்து அறியும் அறிவாளிப்பெண் ஆயிஷா


** இக்குறுநாவலின் ஆசிரியர் இரா.நடராஐன்இயற்பியல்,கல்வியியல்,மேலாண்மை, உளவியல் ஆகிய பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர் ,தலைமையாசிரியர், எழுத்தாளர்,இந்த குறுநாவலின் மகத்தான வெற்றிக்கு பிறகு அவரின்  நூலின் பெயரே இவருக்கு பட்டமாக மாறிவிட்டது.நடராஜன் ஆயிஷா நடராஜன் ஆகிவிட்டார். இது ஆயிஷாவுக்கு கிடைத்த மகத்தான வெற்றி


**  ஆயிஷா நாவல் உண்மையான நிகழ்வைத்தழுவி எழுதப்பட்டது.திண்டிவனம் பகுதியில் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்து அதை தன் உடலில் பரிசோதித்து அதனால்இறந்த மாணவனை மையமாகக் கொண்டது. மாணவனுக்குப்பதில் மாணவியைக்கொண்டு கதைக்கான களத்தை அமைத்து எழுதப்பட்டதே ஆயிஷா நாவல்.


** குனிந்தால்

புத்தகத்தைப்படி...!


நிமிர்ந்தால்

உலகத்தைப்படி..!


படி படி படி

உன்னைக்கட்டிப்போடும்

பாடப்புத்தகத்தை அல்ல..!


உன் சிந்தனையை தூண்டும்

 உலகப்புத்தகத்தை..!


என்பதைப்போல ஆயிஷா பள்ளிப்புத்தகத்தோடு நூலகப்புத்தகத்தையும் படித்தவள் . அறிவியல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவள்


**ஆசிரியர்கள்

சொல்வதை சொல்லும்

கிளிக்குஞ்சுகளே

ஆசிரியர்கள் விரும்பும்

நல்ல மாணவிகள்...!

மாற்றிப்பதில் சொன்னால்

காகங்கள்...!முட்டாள்கள்...!

இதை முற்றிலும் உடைத்தவள் ஆயிஷா உள்ளத்தில் எழும் பதில்களால் ஆசிரியர்களை திணறடித்தவள்.


** பதில்கள்

சொல்லியே 

 பழக்கிய

பயிற்சியளித்த

மாணவிகளை

உருவாக்கிய வகுப்பறையில்

கேள்விகள் கேட்டு

வேள்ளி  செய்தவள்

கேள்வியின் நாயகி ஆயிஷா...!


** தவழும் குழந்தை 

 நடந்தால் மகிழ்ச்சி...!

பேசும் குழந்தை

பாடினால் மகிழ்ச்சி..!

நடக்கும் குழந்தை

ஆடினால் மகிழ்ச்சி...!

ஆனால்

பத்தாம் வகுப்பு மாணவி

பதினொன்றாம் வகுப்பு

கணக்குப் போட்டால்

மாபெரும் குற்றம்...!

தண்டனை...!

இப்படிதான் பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு கணக்கு போட்டதற்கு தண்டனை இதனால் மிகுந்த வேதனை அடைந்தாள்.


** ஆயிஷாவின் கேள்விகளால் தன்னை உணர்ந்த ஆசிரியை தன்னை மாற்றிக்கொள்கிறார்.படிக்கத்தொடங்குகிறார்.

புதுபரிமாணம் பெறுகிறார்.பாடப்புத்தகத்தை தாண்டி படிக்க ஆரம்பிக்கிறார்.தன்னை உணர வைத்ததால் ஆயிஷா மீது மிகுந்த அன்பு கொள்கிறாள்


** சின்ன சின்ன கேள்விகளால் 

தன் அறிவியல்ஆர்வத்தை மேம்படுத்திக்கொள்கிறாள் ஆயிஷா.

ஆசிரியர் அடித்தால் வலிக்காமல் இருக்க அறிவியல் பரிசோதனைக்கு தவளை மற்றும் தன் உடலையே பரிசோதித்து இறந்துவிடுகிறாள்.அறிவியல் மீது ஆர்வம் கொண்ட சிறுமி அறிவியலால் இறக்கும் போது நம் கண்களில் அல்ல இதயத்தில் தான் இரத்தம் வருகிறது.


** ஆசிரியர்கள் கண்டீப்பாக படிக்க வேண்டிய நூல் பல ஆயிஷாக்கள் உருவாக மாணவிகளை கேள்வி கேட்க அனுமதி அளிக்க வேண்டும்.


** புத்தகத்தில் உள்ள பதில்களை விட அவர்களே பதில் எழுத உற்சாகப்படுத்த வேண்டும் ஊக்கப்படுத்த வேண்டும்


** முதலில் படிக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.


** பெற்றோர்கள் உன்  மதிப்பெண் எவ்வளவு என்று கேட்பதை விட நீ என்னென்ன கேள்விகள் வகுப்பறையில் கேட்டாய் எனக்கேட்க வேண்டும்


*ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள், அரசு அனைவரும் ஒன்றிணைந்தால் போதும் புதிய பாதையை உருவாக்கலாம். 

நன்றி - நூல்ஆர்வலன் வ.பெரியசாமி


0 Comments:

Post a Comment

GENRES

Facebook

Blog Archive

Action Movies

Top of the week

Comedy Movies

Popular Posts

Advertisement

Ad Space 300x250
Buy Now

Animation Movies

Hindi Movies