புத்தகத்தலைப்பு:தெருக்களே பள்ளிக்கூடம். ஆசிரியர்:  ஆங்கிலம்- ராகுல் அல்வாரிஸ்  தமிழ்- சுசில் குமார். **இந்த புத்தகத்தின் தலைப்பே ஒரு வரிக்...

Home » , , , , , » தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வாரிஸ் / சுசில் குமார்

தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வாரிஸ் / சுசில் குமார்

 புத்தகத்தலைப்பு:தெருக்களே பள்ளிக்கூடம்.

ஆசிரியர்:  ஆங்கிலம்- ராகுல் அல்வாரிஸ்  தமிழ்- சுசில் குமார்.



**இந்த புத்தகத்தின் தலைப்பே ஒரு வரிக்கவிதை போல் உள்ளது. 


** பதினாறு  வயது சிறுவனின் அனுபவமே இந்த புத்தகம்  ஆகும். 


**1995 ம் ஆண்டு இந்நூலின் மைய ஆசிரியரான ராகுல் தனது பள்ளிப்படிப்பை முடிக்கிறார் .


**சிறப்பு  தகுதியில் முடிக்கிறார். 


**ஒரு மாணவன் பள்ளிப்படிப்பை முடித்ததும் வழக்கமாக அவன் என்ன செய்வான்? அவனது பெற்றோர் என்ன செய்வார்கள்?

அடுத்து கல்லூரிதானே!

இதைத்தான் ராகுல் செய்யவில்லை. தன் படிப்புக்கு ஓராண்டு இடைவெளி விடுகிறான். அதற்கு அவனது பெற்றோர்களும் அனுமதி தருகின்றனர்.


** ராகுல்  ஓராண்டு இடைவெளி  மூலம் 

தன்னை சுற்றி இருக்கும் இயற்கையை அறிந்துகொள்ள  முற்படுகிறான்


**தனது வீட்டைவிட்டு வெளியே சென்றால் பெற்றோர் துணையுடனேயே சென்று பழகிய ராகுல் முதன் முதலில் கோவாவின் மபுசா பகுதியில் ஒரு அலங்கார மீன்கடையில் வேலைக்கு சேர்கிறார். அங்கு சிறிது சிறிதாக மீன்களைப் பற்றியும், அதன் வகைகளைப் பற்றியும், அந்த மீன்களுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றியும், மீன்தொட்டிகள் அமைப்பது பற்றியும், மீன் தொட்டி குழாய்கள் மாற்றுவது பற்றியும் அறிந்து கொள்கிறார். பின் வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று மீன்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்க்கிறார். மீன் தொட்டிகளை சரி செய்து தருகிறார். இதற்கு வாடிக்கையாளர்கள் தரும் பணத்தை தனது முதல் வருமானமாகப் பெற்றுக் கொள்கிறார்.


** பல்வேறு  இயற்கை  சார்ந்த  தொழில்களில் சேர்ந்து அனுபவத்தோடு வருமானமும் பெறுகிறான்  


**ராகுல் பெற்ற  அனுபவத்தை "Free from school" என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியதன்  தமிழாக்கம் 

 இது.


**இந்த  புத்தகம் அனுபவப்பதிவாக மட்டுமில்லாமல் மண்புழு, முதலை, காளான், பாம்புகள், ஆமை என உயிரினங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய நூலாக உள்ளது மிகச் சிறப்பு.


**தமிழில் இந்நூல் திரு. சுசில் குமார் அவர்களால் மிக எளிமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


 **குனிந்தால் 

     புத்தகத்தைப்படி...!

     நிமிர்ந்தால் 

     உலகத்தைப்படி..!


* அனுபவமே ஆற்றல் மிகுந்த கல்வி ...!என்பதை எல்லாம் இந்த  புத்தகம் உணர்த்துகிறது.


நன்றி

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி

0 Comments:

Post a Comment

GENRES

Facebook

Blog Archive

Action Movies

Top of the week

Comedy Movies

Popular Posts

Advertisement

Ad Space 300x250
Buy Now

Animation Movies

Hindi Movies